மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் சோதனை: ஆவடி, பொன்னேரியில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு


மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் சோதனை: ஆவடி, பொன்னேரியில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 6 May 2022 5:21 PM IST (Updated: 6 May 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவடி, பொன்னேரி மற்றும் ஐ.டி. காரிடர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மின்நுகர்வோர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.37 லட்சத்து 38 ஆயிரத்து 231 விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். குற்றவியல் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக சமரச தொகையாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. மின் திருட்டு தொடர்பான தகவல்களை அமலாக்க நிர்வாக என்ஜினீயரை 94458 57591 என்ற செல்போனில் தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story