கோவில்பட்டியில் 23 பஸ்களில் ஏர் ஹாரன் பறிமுதல்
கோவில்பட்டியில் 23 பஸ்களில் ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், வட்டாரப் போக்குவரத்துஅதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், போக்குவரத்து கழக உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினா். இதில் 23 தனியார் பஸ்கள், மினி பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப் பட்டது. ஏர் ஹாரன்கள் பொருத்தப் பட்ட பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.
Related Tags :
Next Story