கும்மிடிப்பூண்டி பெண்கள் பள்ளியில் விஷ பாம்பு


கும்மிடிப்பூண்டி பெண்கள் பள்ளியில் விஷ பாம்பு
x
தினத்தந்தி 6 May 2022 6:01 PM IST (Updated: 6 May 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி பெண்கள் பள்ளியில் விஷ பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து காட்டிற்குள் பத்திரமாக விட்டனர்.

கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மைதானத்தின் ஒரு பகுதியில் மாணவிகளுக்கான கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையின் கழிவு நீர் நிரம்பி வழிவதாலும், கழிவறையின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் அடிக்கடி வெளியேறி வருவதாலும் கழிவறையை சுற்றி செடி கொடிகள் பாதுகாப்பற்ற முறையில் புதர் போல் மண்டி கிடக்கின்றன.

பள்ளி மாணவிகள் அடிக்கடி சென்று வரும் இடத்தில் இந்த புதர் மண்டிய இடத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது. இதனைக்கண்ட பள்ளி உதவி தலைமையாசிரியர் பிரபாகரன், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து மாதர்பாக்கம் காப்பு காட்டிற்குள் பத்திரமாக விட்டனர்.


Next Story