ஆத்தூரில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
ஆத்தூரில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
வடக்கு ஆத்தூர் மேல தெருவை சேர்ந்த கணேசன் மகன் மாரியப்பன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் நல்ல பிள்ளையார்கோவில் தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து நாசரேத் சந்தை தெருவை சேர்ந்த வில்சன் மகன் சாமுவேல் பிரகாஷ் என்ற ஜாக்கெட்(22) என்பவர் வழிமறித்து தனக்கு செலவுக்கு பணம் தருமாறு ஸ்குரூ டிரைவரை காட்டி மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்த மாரியப்பனின் சட்டப்பையில் சாமுவேல் பிரகாஷ் வலுக்கட்டாயமாக கையைவிட்டு பணத்தை பறிக்க முயன்றுள்ளார். மாரியப்பன் கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சாமுவேல் பிரகாஷ் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து சாமுவேல் பிரகாஷை கைது செய்தார்.
Related Tags :
Next Story