புனே ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி ரூ.7 கோடி கேட்டு மிரட்டல்- போலீசாரை அலற வைத்த 2 பேர் கைது
புனே ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ரூ.7 கோடி கேட்டு போலீசாரை அலற வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனே,
புனே ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ரூ.7 கோடி கேட்டு போலீசாரை அலற வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல்
புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 3-ந்தேதி மாலை 4 மணி அளவில் டெலிபோன் அழைப்பு ஒன்று வந்தது. இதில், எதிர்முனையில் பேசிய ஆசாமி தான் மகேஷ் காவ்டே பேசுவதாகவும், புனே ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.
மேலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள இருப்பிடம் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டுமெனில் தனக்கு ரூ.7 கோடி தரவேண்டும் என தெரிவித்தார்.
அதிரடி சோதனை
இதுபற்றி போலீசார் ரெயில்வே போலீசாருக்கு தெரிவித்து உஷர்படுத்தினர். இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து புனே ரெயில் நிலையம், மேலும் அங்கு வந்த 17 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், குப்பை தொட்டிகள், பார்சல் அலுவலகம், கழிவறைகள், ரெயில் வழித்தடம் போன்ற இடங்களில் அங்கும், அங்குலமாக அதிரடி சோதனை நடத்தினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் அந்த ஆசாமி புரளி கிளப்பியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஜல்னாவை சேர்ந்த சூரஜ் தாக்குர் (வயது30), மற்றும் அவரது கூட்டாளி சீருர் நாவ்ரே பகுதியை சே்ாந்த கரண் காலே (33) ஆகிய 2 பேர் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் கேட்டது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story