தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
தினத்தந்தி 6 May 2022 6:22 PM IST (Updated: 6 May 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒருவர் தலையில் 100தேங்காய் உடைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் பாரதி ரோட்டில் உள்ள தோராளியப்ப சாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதனையொட்டி தோரளியப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து‌ சாமி திருவீதி உலா, சேவையாட்டம், நடந்தது. பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது ஒரு பக்தர் தலையில் 100 தேங்காய் உடைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சிலர் சாமி வந்து ஆடினார்கள். பின்னர் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story