பா.ஜ.க. சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


பா.ஜ.க. சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 6 May 2022 6:44 PM IST (Updated: 6 May 2022 6:44 PM IST)
t-max-icont-min-icon

இந்து தெய்வங்களை இழிவு படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை பா.ஜ.க. சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. மற்றும் சிவன் அடியார்கள், ஆன்மிக அன்பர்கள் குழு சார்பில் திருப்பத்தூர் சின்ன குளம் மாரியம்மன் கோவில் தெரு சாய்பாபா கோயில் எதிரே இருந்து  ஊர்வலமாக சென்று போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. துணைச்செயலாளர் வக்கீல் அன்பழகன் தலைமையில் நடைபெறஅறது. ஊர்வலம் புறப்பட்டபோது துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை எனக் கூறினார். வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் ஊர்வலம் நடைபற்றது. காவி கொடிகளுடன் கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.

அதில் நடராஜர், காளி உள்ளிட்ட இந்து மத தெய்வங்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழக காவல் துறை தலைவருக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

இதில் அடியார்க்கு அடியேன் திருக்கூட்டம் சார்பில் பைரவ வினோத், பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் அருள்மொழி, பழனி, ஏ.கே.ஜி. சண்முகா, சிவனடியார்கள், ஆன்மிக பக்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.

Next Story