தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் பதுக்கிய கோவில் பணியாளர் கைது
தூத்துக்குடியில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய கோவில் பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கனகசபை தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.63 ஆயிரத்து 500 மதிப்புள்ள 17 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி சிவன் கோவில் பணியாளர் விநாயகம் என்பவரை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story