மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு புறம்போக்கில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு புறம்போக்கில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 6 May 2022 8:34 PM IST (Updated: 6 May 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு புறம்போக்கில் வசிப்போருக்கு பட்டா வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக அஞ்சலி ரவுண்டானா பகுதியில் இருந்து மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக வந்தனர். இதில் சில பெண்கள் கைக்குழந்தையுடன் பங்கேற்றனர். இந்த ஊர்வலத்தின் இறுதியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீர்நிலை புறம்போக்கு, கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த கூடாது. அதுதொடர்பாக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். அதோடு வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அந்த கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Next Story