18,441 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர்


18,441 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 6 May 2022 9:57 PM IST (Updated: 6 May 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் 18,441 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர்.

வேலூர்

மாவட்டம் முழுவதும் 18,441 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில்  எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 9,528 மாணவர்கள், 9,401 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 482 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 

முதல் நாளான நேற்று 18 ஆயிரத்து 441 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 1,041 பேர் தேர்வு எழுதவில்லை.

மாணவ- மாணவிகள் அதிகாலையிலேயே எழுந்து தங்களை தயார்படுத்திக் கொண்டனர். தேர்வுக்கு செல்லும் மாணவர்களை பெற்றோர் வாழ்த்தி அனுப்பினர். பள்ளி அருகே உள்ள கோவில்களில் மாணவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு தேர்வு எழுத சென்றனர்.

பறக்கும் படை கண்காணிப்பு

வேலூர் ஜெயிலில் 27 கைதிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் தேர்வு எழுதினர். இந்த தேர்வு வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

1,500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை கண்காணிக்க பறக்கும் படையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story