சூறாவளி காற்றுடன் பலத்த மழை
அணைக்கட்டு, பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. குடியாத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது. இந்தநிலையில் மாலை 4 மணிக்கு திடீரென மேக மூட்டம் ஏற்பட்டு பள்ளிகொண்டா, அணைக்கட்டு, செதுவாலை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த சூறாவளி காற்றில் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய டிஜிட்டல் பெயர் பலகை விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சாலையில் இருந்த புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
விளம்பர பேனர்கள் காற்றில் பறந்தது. சூறாவளி காற்றால் சுமார் 10 நிமிடம் சாலைகளில் எந்த வாகனமும் செல்லவில்லை. சுமார் அரை மணிநேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புழுக்கத்தில் தவித்து வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அணைக்கட்டு பகுதியில் ஊசூர் செல்லும் சாலையில் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story