பாலக்கோடு பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
பாலக்கோடு பகுதியில் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்..
பாலக்கோடு:-
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா உத்தரவின் பேரில் காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு அருகே 5-வது மைல்கல், ஆத்துகொட்டாய், கரகூர் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள், பேக்கரிகள், குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் திருமல்வாடி அரசு பிற்பட்டோர் மாணவர் விடுதி சமையற்கூடம், பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story