குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி


குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 6 May 2022 10:11 PM IST (Updated: 6 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஜங்காலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கையநாயுடு. இவரின் மகள் சந்திரா (வயது 55), திருமணம் ஆகாதவர். இவர் தனது தம்பி லோகநாதன் குடும்பத்துடன் வசித்து வந்தார். 
ஓரிரு நாட்களுக்கு முனபு அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பிகள் துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. 
கிராமத்தில் உள்ள வயல்ெவளி வழியாக சென்றபோது, தரையில் அறுந்து கிடந்த மின் கம்பியை சந்திரா தெரியாமல் மிதித்துள்ளார். அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சந்திரா பலியானார்.

இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story