நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா


நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
x
தினத்தந்தி 6 May 2022 10:40 PM IST (Updated: 6 May 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

தேனி: 

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் 17-வது ஆண்டு விழா நடந்தது. இதற்கு உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் தில்லைக்கனி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், நீச்சலில் உலக அளவில் சாதனை நிகழ்த்திய சினேகனுக்கு உறவின்முறை நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் 2020-21-ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதல் 3 இடங்களை பிடித்த முதலாமாண்டு, 2-ம் ஆண்டு மாணவிகளுக்கும், சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட ரோஷிபாவுக்கும் விருது, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் கல்லூரி இணைச் செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

Next Story