கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 12 போலீசார் தனிப்பிரிவுக்கு இடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 12 போலீசார் தனிப்பிரிவுக்கு இடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவு
x
தினத்தந்தி 6 May 2022 10:59 PM IST (Updated: 6 May 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் உள்பட 12 போலீசாரை தனிப்பிரிவுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் உள்பட 12 போலீசாரை தனிப்பிரிவுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு:-
கீழ்குப்பம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவுக்கும், வரஞ்சரம் தனிப்பிரிவு போலீஸ்காரர் சேட்டு கீழ்க்குப்பம் தனிப்பிரிவுக்கும், திருப்பாலபந்தல் தனிப்பிரிவு போலீஸ்காரர் சுந்தர் மூங்கில்துறைப்பட்டு தனிப்பிரிவுக்கும், வடபொன்பரப்பி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் கரியாலூர் தனிப்பிரிவுக்கும், சங்கராபுரம் தனிப்பிரிவு போலீஸ்காரர் குமரன் ரிஷிவந்தியம் தனிப்பிரிவுக்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு தனிப்பிரிவு போலீஸ்காரர் கொளஞ்சிராஜன் வரஞ்சரம் தனிப்பிரிவுக்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு தனிப்பிரிவு போலீஸ்காரர் ஆறுமுகம் தியாகதுருகம் தனிப்பிரிவுக்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ்காரர் விஜய் அதே காவல் நிலையத்தில் உள்ள தனிப்பிரிவுக்கும், திருக்கோவிலூர் போலீஸ்காரர்  கணேஷ் சின்னசேலம் தனிப்பிரிவுக்கும், எலவனாசூர்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எங்கள்துரை அதே காவல் நிலையத்தில் உள்ள தனிப்பிரிவுக்கும்,  திருநாவலூர் போலீஸ்காரர் சரவணன் உளுந்தூர்பேட்டை தனிப்பிரிவுக்கும்,  சங்கராபுரம் தனிப்பிரிவு போலீஸ்காரர் அய்யப்பன் பகண்டை கூட்டுரோடு தனிப்பிரிவுக்கும், பகண்டை கூட்டுரோடு தனிப்பிரிவு போலீஸ்காரர் நாராயணன் அதே காவல் நிலையத்தில் உள்ள தனிப்பிரிவுக்கும், வடபொன்பரப்பி தனிப்பிரிவு போலீஸ்காரர் கிருஷ்ணன் சங்கராபுரம் தனிப்பிரிவுக்கும், மூங்கில்துறைப்பட்டு தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேந்திரன் வடபொன்பரப்பி தனிப்பிரிவுக்கும், ரிஷிவந்தியம் தனிப்பிரிவு போலீஸ்காரரர் கோபி திருப்பாலபந்தல் தனிப்பிரிவு போலீஸ்காரராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு மேற்கண்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story