எருமப்பட்டி பேரூராட்சியில் கட்டணம் செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

எருமப்பட்டி பேரூராட்சியில் கட்டணம் செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 6 May 2022 11:11 PM IST (Updated: 6 May 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி பேரூராட்சியில் கட்டணம் செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

எருமப்பட்டி:
எருமப்பட்டி பேரூராட்சியில் 2 ஆயிரத்து 413 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் நேற்று துண்டிக்கப்பட்டன. அதன்படி நேற்று ஒரே நாளில் சுமார் 40 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலுவை வைத்துள்ள குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்படும் எனவும், இந்த பணி மேலும் ஒரு வாரம் தொடரும் என பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Next Story