திண்டிவனம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
திண்டிவனம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
திண்டிவனம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் பொற்செழியன் மகன் ராஜ்குமார் (வயது 30). இவர் சம்பவத்தன்று தனது நபர்களுடன் வேளாங்கண்ணி செல்வதற்காக சென்னையில் இருந்து மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே வந்தபோது ராஜ்குமார் ரெயிலில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே ரெயிலை நிறுத்தி படுகாயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story