கல்வராயன்மலை அடிவாரப்பகுதியில் பலத்த சூறைக்காற்று; ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
கல்வராயன்மலை அடிவாரப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை அடிவாரம் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது அதேஊரை சேர்ந்த விவசாயி ஒருவர் 3 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்களில் கற்பூர வாழை, பூ வாழை, செவ்வாழை, தேன் வாழை உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி சேதமடைந்த வாழைக்கு நஷ்டஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Related Tags :
Next Story