கெட்டுப்போன 60 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
திருவாரூரில், கெட்டுப்போன 60 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன.
இதனையடுத்து திருவாரூர் நகர பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோழி இறைச்சி பறிமுதல்
அப்போது திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டின் பின்புறம் பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருந்த தரமற்ற 60 கிலோ கோழி இறைச்சி கண்டறியப்பட்டது.இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அந்த இறைச்சி உணவகங்களுக்கு சமைப்பதற்கு அனுப்பப்பட இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த இறைச்சியை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் அடிப்படையில் சிலம்பரசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சி அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story