காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம்
பெரிய ஏரியூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 22 பேர் காயமடைந்தனர். 5 காளைகளுக்கும் காயம் ஏற்பட்டது.
அணைக்கட்டு
பெரிய ஏரியூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 22 பேர் காயமடைந்தனர். 5 காளைகளுக்கும் காயம் ஏற்பட்டது.
காளை விடும் விழா
அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் காளைவிடும் விழா நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் திருக்குமரன், மெர்லின் ஜோதிகா, வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் விழாக் குழுவினர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகு காளை விடும் விழா தொடங்கியது. இதில் 230 காளைகள் பங்கு பெற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. தெருவின் இருபக்கங்களிலும் இளைஞர்கள் நின்று காளைகளை உற்சாகப்படுத்தினர்.
22 பேர் காயம்
அப்போது காளைகள் முட்டியதில் 22 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காளைகள் அதிவேகமாக ஓடியபோது 5 காளைகள் விழுந்து படுகாயம் அடைந்தன.
குறுகிய நேரத்தில் அதிவேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.50,000, மூன்றாவது பரிசு ரூ.30,000 என 42 பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரிய ஏரியூர் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story