ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்


ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 6 May 2022 11:57 PM IST (Updated: 6 May 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் முத்துசாமி தலைமயில் வெங்கடேசபுரத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மருதமுத்து சங்க செயல்பாடுகள் குறித்தும், பொருளாளர் ஆதிசிவம் நிதிநிலை குறித்தும் அறிக்கை வாசித்தனர். இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கவேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனே தொடங்கவேண்டும். பெரம்பலூரில் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளை நகராட்சி நிர்வாகம் உடனே சீரமைக்கவேண்டும். நகரில் பெரும்பாலான வார்டுகளில் பகலில் நோட்டமிட்டு இரவில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்துவருவதால், முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து குற்றங்களை தடுக்கவேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆலத்தூர் வட்ட தலைவர்செங்கமலை, சென்னையில் நடந்த மாநில மேலாண்மை கூட்ட நடவடிக்கைகள் குறித்தும், குன்னம் வட்ட தலைவர் சிவலிங்கம், வேப்பந்தட்டை வட்ட பொருளாளர் தங்கராசு ஆகியோர் ஓய்வூதியர்கள் காப்பீட்டுத்திட்டத்தை தொடங்கி காப்பீட்டு தொகையை உறுப்பினர்களுக்கு வழங்கவேண்டுகோள் விடுத்துபேசினார்கள். எஸ்.கந்தசாமி வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்திவைத்தார்.

Next Story