குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருமருகல்-மருங்கூர் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல்-மருங்கூர் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் வினியோகம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருமருகல்- மருங்கூர் சாலையில் கரையிருப்பு வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது.
இந்த குழாய் மூலம் சேகல், மருங்கூர், நெய்க்குப்பை, கண்ணமங்கலம் வழியே கீழ்வேளூர், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குழாயில் உடைப்பு
இந்த நிலையில் கரையிருப்பு ஆற்றின் பாலத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவில் குடிநீர் வெளியேறி ஆற்றில் கலந்து வீணாகிறது.
பல நாட்களாக இந்த உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சேகல், மருங்கூர், நெய்க்குப்பை, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவது வேதனையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருமருகல்-மருங்கூர் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story