தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2022 11:58 PM IST (Updated: 6 May 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்

நன்னிலம்
திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள மருதவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி கீதா (வயது 37). இவர், கணவரிடம் மகளிர் குழுவிற்கு கட்டுவதற்காக பணம் கேட்டுள்ளார். அவர் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். ஆனால், கணவரை மிரட்டுவதற்காக கீதா திடீரென உடலில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராஜூவ்காந்தி, கீதா உடலில் பற்றிய தீயை அணைத்து சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின்பேரில், பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story