அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பதவியேற்பு
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பதவியேற்பு
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைப்புல முதன்மையரும், அழகப்பா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனரும் திட்டம் மற்றும் வளர்ச்சி பிரிவின் தனி அலுவலருமான பேராசிரியர் எஸ்.ராஜா மோகன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) பதவி ஏற்றுக்கொண்டார். நியமன ஆணையை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் முனைவர் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர் கருப்புசாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சங்கரநாராயணன் குணசேகரன் மற்றும் நிதி அலுவலர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story