தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு


தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 May 2022 12:09 AM IST (Updated: 7 May 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் செல்வக்குமார்(வயது 32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 3-ந் தேதி அப்பகுதியில் உள்ள அரசமரத்து அடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன்(19), மாதவன்(19) ஆகியோர் செல்வகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த செல்வகுமார் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story