அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்
அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையவுள்ளதை முன்னிட்டு தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளையும், திட்டங்களையும் விளக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடத்தப்படவுள்ள புகைப்பட கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சியினை சிறப்பாக நடத்த அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசுகையில், “ஓயா உழைப்பின் ஓராண்டுகடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் 10 நாள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்வுகளும், பொதுமக்களுக்கு சேவை வழங்க கூடிய அரசு இ-சேவை மையம் அமைத்தல், உள்ளூர் கலைஞர்களை கொண்டு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் வகையிலான மஞ்சள் பைகளையும், மரக்கன்றுகளையும் பொதுமக்களுக்கு வழங்குதல், மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் ஏற்பாடு செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்துதல், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அலுவலர்கள் குழு அமைத்து துறைவாரியான கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளது. அது நவீன எல்.இ.டி. வாகனம் மூலம் அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வகையிலான வீடியோக்கள் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. எனவே இந்த 10 நாள் கண்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் பார்த்து தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story