“பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்”
“பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்” ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
பட்டின பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மன வேதனையை அளிக்கிறது. ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் விஷயத்தில் யாரும் தலையிட்டு இதை செய்யக்கூடாது. பட்டின பிரவேசம் சம்பந்தமாக ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்ற ஆன்மிக விஷயத்தில் தலையிடுவதால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது.
சிறப்பாக செயல்பட்டு வரும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி செய்கின்றனர். பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். குருவை தூக்கிக் கொண்டாடும் நிகழ்ச்சி இது. கண்டிப்பாக பட்டின பிரவேசம் நடத்தியே தீருவோம். மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story