விக்கிரவாண்டி பகுதி கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு


விக்கிரவாண்டி பகுதி கடைகளில்  சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 7 May 2022 12:45 AM IST (Updated: 7 May 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி பகுதி கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீரென ஆய்வு செய்தனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பில் மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர்கள் சத்யா, சிவகுருநாதன், ரமணி, பிருத்திவிராஜ், பாபு, விஜயகுமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று விக்கிரவாண்டி பகுதியில் உள்ள ஓட்டல், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்களை வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ததோடு வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்.

Next Story