தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 May 2022 12:48 AM IST (Updated: 7 May 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி 14-வது வார்டு புகழியா பிள்ளை தெருவில் சாலையோரத்தில் பெரிய அளவிலான குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்வோர் சாலை ஓரம் ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் போடப்பட்டிருந்த குழாய்களை அப்புறப்படுத்தினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சுவாமிநாதன், திருச்சி.

சீரமைக்கப்படாத சுடுகாடு 
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி கல்லாங்குத்து செல்லும் சாலையிலுள்ள சுடுகாட்டை புதர், முள்செடிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், பராமரிப்பின்றி உள்ளது. தகனம் செய்ய உடல்களை எடுத்துச் செல்லும்போது, பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையுமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள், நடுப்பட்டி, திருச்சி. 


அடிப்படை வசதி செய்து தரப்படுமா? 
திருச்சி மாவட்டம், பொன்மலைகோட்டம், பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் 7-வது குறுக்கு தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மழை காலங்களில் சாலையில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலைப்பட்டி, திருச்சி. 



Next Story