நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ெரயில்


நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ெரயில்
x
தினத்தந்தி 7 May 2022 12:49 AM IST (Updated: 7 May 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே தேர்வுக்காக நெல்லையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ெரயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.

விருதுநகர், 
ெரயில்வே தேர்வுக்காக நெல்லையில் இருந்து மைசூருக்கு இன்று (சனிக்கிழமை) சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 10.10மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ெரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூரு வழியாக 8-ந் தேதி இரவு 11.55 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இதேபோன்று 10-ந் தேதி இரவு 8:15மணிக்கு மைசூருவில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ெரயில் 11-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. மேற்கண்ட தகவலை தென்னக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story