நிலத்தடி குடிநீர் ஆதார மையங்களில் நகரசபை தலைவர் ஆய்வு


நிலத்தடி குடிநீர் ஆதார மையங்களில் நகரசபை தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 7 May 2022 12:56 AM IST (Updated: 7 May 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நிலத்தடி குடிநீர் ஆதார மையங்களில் நகரசபை தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் நகராட்சி பகுதியில் கோடை கால குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்காக ஆனைக்குட்டம் மற்றும் ஒண்டிபுலிகுவாரி நிலத்தடி நீர் ஆதாரங்களில் நகரசபை தலைவர் மாதவன் நேரில் சென்று ஆய்வு செய்தார். நீரேற்று மையங்களில் மின் மோட்டார்களை ஆய்வு செய்த நகரசபை தலைவர் அவற்றை சீரமைக்க உத்தரவிட்டார். மேலும் விருதுநகர் நகராட்சி வி.என்.பி.ஆர். பூங்காவினை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டதுடன் சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார். அப்பகுதியில் மின்விளக்குகளை சீரமைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

Next Story