அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 May 2022 7:26 PM GMT (Updated: 6 May 2022 7:26 PM GMT)

சித்திரை மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நொய்யல், 
நொய்யல் அருகே பிரசித்தி பெற்ற சேமங்கி மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான  திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே உள்ள அன்பு கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புன்னம் மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பேரூர் அம்மன் கோவில், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதியம்மன் கோவில், திருக்காடுதுறை மாரியம்மன் கோவில், நஞ்சை புகழூர் புளியமரத்தான் கோவில், கண்டி அம்மன் கோவில், மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Next Story