வணிகர் தின விழா
கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் தின விழா சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் தின விழா சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஒருங்கிணைந்த மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி அனைத்து வணிகர் சங்க செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் கண்ணன், விழுப்புரம் மாவட்ட தலைவர் எம்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி அனைத்து வணிகர் சங்க தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக வணிகர் சங்க நிர்வாகிகள் சண்முகம், ரவி, சீனிவாசன், கதிரவன், செந்தில், செல்வராஜ், விஜய்ஆனந்த், சதீஷ்குமார், சிகாமணி பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். கூட்டத்தில் வருகிற ஜூன் மாதம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களையும் இணைத்து செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் மணலூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, புதுப்பட்டு, திருக்கோவிலூர், பாண்டலம், தியாகதுருகம் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story