அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 May 2022 12:59 AM IST (Updated: 7 May 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தோகைமலை, 
தோகைமலை அருகே கொத்தமல்லிமேடு கிராமத்தில் 50-க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில வாரங்களாக சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர்கள் நேற்று முன்தினம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக உப்பிலியபட்டியை சேர்ந்த மகாமணி, கொத்தமல்லி மேடு பகுதியை சேர்ந்த சண்முகம், ஆனந்தன், ஆறுமுகம் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story