அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறையில் பணியாற்றிய 38 ஊழியர்கள் அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை, நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க உத்தரவு வழங்கியது. இதை தொடர்ந்து 25 பேர் பணிக்கு திரும்பிய நிலையில், 13 சமையலர்களுக்கு இது வரை பணி வழங்கப்படவில்லை என அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். எனவே நீதிமன்ற உத்தரவு படி சமையலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story