கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெண்ணைமலை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கினார். இதில் கலாராணி, கந்தசாமி, குப்புசாமி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், நிலுவையில் உள்ள தொழிலாளர் நலவாரிய நீண்டகால சலுகைகளை உடனே வழங்க வேண்டும், ஆன்லைனில் பதிய முடியாத கட்டுமான, உடல் உழைப்பு தொழிலாளர்களின் மனுக்களை நேரடியாகவோ, வாரிய அலுவலக பதிவு மூலமாகவோ பென்ஷன் தொகை தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
Related Tags :
Next Story