நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி


நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 May 2022 1:07 AM IST (Updated: 7 May 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

சமயபுரம், மே.7-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பட்டுதுறை கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் மணிகண்டன் (வயது 25). இவர் நேற்று முன்தினம் பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் என்ற இடம் அருகே வந்த போது அங்கே நின்று கொண்டிருந்த வேன் மீது மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story