பட்டா, வீடு கேட்டு கலெக்டரிடம் மனு
விருதுநகரில் பட்டா, வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் குடிமனைப்பட்டா மற்றும் குடியிருக்க வீடு கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெறும் என மாநிலக்குழு அறிவித்திருந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து புதிய மனை பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கி குடியிருப்போருக்கு வீட்டை சொந்தமாக்க வேண்டும். சொத்து மதிப்புக்கான பணத்தை அரசே கோவில்களுக்கு செலுத்த வேண்டும். சொந்த நிலமோ, வீடோ இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு வீட்டு மனையும் வீடும் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த இயக்கத்தின் போது மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், லட்சுமி, சுந்தரபாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story