போலீஸ்காரர்களுக்கு யோகா-மூச்சுப்பயிற்சி
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில்போலீஸ்காரர்களுக்கு யோகா-மூச்சுப்பயிற்சி
தஞ்சாவூர்:
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை போலீஸ்காரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களது மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் போலீஸ்காரர்களுக்கு மூச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான போலீஸ்காரர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். அவர்களுக்கு யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தினமும் யோகா செய்வதால் உடல்நலத்துக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும், ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கலாம். எனவே யோகா செய்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் நிர்வாக அறங்காவலர் எஸ்.புருஷோத்தமன், செயலாளர் பூரண சந்திரன் மற்றும் மனவளக்கலை பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
Related Tags :
Next Story