கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்


கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
x

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கொள்ளிடம் மற்றும் காவிரி கரையோர பகுதி கிராமங்களில் கோடைகால நெல் சாகுபடி, முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, வயல்களில் நடவு செய்வதற்காக டிராக்டர் மூலம் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வரப்புகளை சீரமைக்கும் பணிகளும், நடவு செய்யப்படும் வயல்களில் உள்ள மேடு-பள்ளங்களை சமப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  விவசாய கூலி தொழிலாளர்கள் மூலமும், எந்திரம் மூலமும் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
 கடந்த ஆண்டு இந்த பகுதியில் கோடை நெல் சாகுபடி 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் இந்த ஆண்டு அதே அளவு ஏக்கரில் கோடைநெல் சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story