மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அதிகரிக்க வேண்டும்
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அதிகரிக்க வேண்டும் என்று விருதுநகர் எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.
மதுரை,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரம் சேவை கிடைத்தால்தான் சர்வதேச விமானங்களை இயக்கமுடியும். தற்போது மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் குறைவாக இருப்பதால் இரவு 10 மணிக்குமேல் விமான நிலையம் இயங்குவதில்லை. இந்த குறையைத் தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் மதுரை விமான நிலையம் கடந்த 2013-ம் ஆண்டு எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில்தான் கடந்த 8 ஆண்டுகளாக உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story