தமிழ்ெமாழி பாடத்தேர்வுக்கு 1,827 மாணவ, மாணவிகள் வரவில்லை
மதுரையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாள் தமிழ்மொழி பாடத்தேர்வுக்கு 1,827 மாணவ-மாணவிகள் வரவில்லை.
மதுரை,
மதுரையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாள் தமிழ்மொழி பாடத்தேர்வுக்கு 1,827 மாணவ-மாணவிகள் வரவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வை 487 பள்ளிகளை சேர்ந்த 40,411 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 20,653 மாணவர்களும், 19,758 மாணவிகளும் அடங்குவர்.
தமிழ் மொழிப்பாடத்தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வுக்கு 1,827 மாணவ, மாணவிகள் வரவில்லை. 606 தனித்தேர்வர்களில் 46 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்காக மாவட்டம் முழுவதும் 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையிலான பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
253 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர்
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மையங்கள் 9 இடங்களில் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வுகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே கண்பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்றைய தேர்வை 253 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதற்கிடையே, தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்களாக 265 பேரும், 265 துறை அலுவலர்களும், 125 கூடுதல் துறை அலுவலர்களும், மேற்பார்வையாளர்களாக 1,888 பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர். 5,929 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 600 நிலையான படையினரும், 9 ஆய்வு அலுவலர்கள் தலைமையிலான சிறப்பு பறக்கும்படையினர் மாவட்ட முழுவதிலும் உள்ள தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
குடிநீர் வசதி
தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மின்தடை இல்லாமல் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வசதியாக மின்வாரியத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணவ, மாணவிகள் தேர்வுக்கூடத்துக்குள் எலெக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பாதித்த மாணவ, மாணவிகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுரை மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதித்த மாணவர்கள் யாரும் தேர்வெழுதவில்லை. தமிழ் மொழிப்பாடத்தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story