ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் திருட்டு
ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி ரெயில்வே பீடர் ரோட்டில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தின் குரூப் லீடராக பிரபாகரன்(வயது 30) உள்ளார். இவர் அறந்தாங்கி போலீசாரிடம் கொடுத்த புகாரில், கடந்த 3-ந் தேதி வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றோம். மறுநாள் காலை நிறுவனத்தை திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் திறக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 891-ஐ திருடிய மர்ம நபர்கள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு, கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றுள்ளனர், என்று கூறியுள்ளார். புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story