‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் தேங்கும் மழைநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பசவண்ண கோவில் பகுதியில் கிருஷ்ணகிரி- ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. குளம்போல் தேங்கி உள்ள மழைநீரால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் வசதி செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ஜெயமுருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.
===
நோய் பரவும் அபாயம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரதிதாசன் தெருவில் புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் தெருவோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த வழியாக செல்லும் பயணிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் சுகாதார ்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனேவ அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.பழனி. பாப்பாரப்பட்டி, தர்மபுரி.
சேலம் 46-வது வார்டு சீரங்கன் தெருவில் குப்பை தொட்டி இருந்தும் அதன் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால் அந்த வழியாக சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் குப்பகைளை அள்ளி செல்ல வேண்டும்.
-பூபதி, சீரங்கன் தெரு, சேலம்.
======
வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
நாமக்கல்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மருத்துவக்கல்லூரி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அந்த பகுதியில் 4 வழிச்சாலையில் இடையே இருபுறமும் கடந்து செல்ல வழி விடப்பட்டுள்ளது. மாணவர்களும், பொதுமக்களும், வாகனங்களும் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், உலகப்பம்பாளையம், திருச்செங்கோடு.
===
சுகாதார கேடு
சேலம் மாவட்டம் ஓமலூர் 15-வது வார்டு, தர்மபுரி மெயின் ரோடு பஜார் தெருவில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தினமும் அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஸ்வரி, ஓமலூர், சேலம்.
===
சேதமடைந்த குடிநீர் தொட்டி
சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த மாரமங்கலத்துப்பட்டி நடுநிலைப்பள்ளி வளாகத்தின் அருகே மிகவும் சேதமடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் அருகே பள்ளி மாணவர்களின் கழிவறை அமைந்துள்ளது. பயன்பாட்டில் உள்ள அந்த குடிநீர் தொட்டியில் ஆங்காங்கே விரிசல் விழுந்து தண்ணீர் வீணாகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
-அன்புமணி, மாரமங்கலத்துப்பட்டி, சேலம்.
===
வீணாகும் குடிநீர்
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் மாமாங்கம் சிக்னலை அடுத்த சந்திப்பு சாலையோரம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது. பல மாதங்களாக இதே நிலையில்தான் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-கவுதம், மாமாங்கம், சேலம்.
===
சேதமடைந்த கட்டிடம்
சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்க கட்டிடம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க முன் வர வேண்டும்.
-கண்ணன், லீ பஜார், சேலம்.
====
Related Tags :
Next Story