நாளை மெகா முகாம்: 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு


நாளை மெகா முகாம்: 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
x
தினத்தந்தி 7 May 2022 4:30 AM IST (Updated: 7 May 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை நடைபெறுகிறது.இதில் 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட 27 லட்சத்து 99 ஆயிரத்து 723 பேருக்கு முதல் தவணையும், 22 லட்சத்து 47 ஆயிரத்து 998 பேர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
.இதுவரை 28 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 29-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை முகாம் நடைபெறும். இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 5,240 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 லட்சத்து 43 ஆயிரத்து 790 டோஸ் கோவிஷீல்டு, ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 390 கோவேக்சின், 59 ஆயிரத்து 560 கோர்பெவாக்ஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முகாமில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story