வழிப்பறியில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே உள்ள இலுப்பு தோப்பு, கூடமலை, கடம்பூர், செந்தாரப்பட்டி ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களிடம் இருந்து 3 பேர் செல்போன், பணத்தை பறித்து உள்ளனர். கூடமலையை சேர்ந்தவர் கந்தசாமி மற்றும் 74 கிருஷ்ணாபுரம் சேர்ந்தவர் ஷாஜஹான் மற்றும் 4 பேரை வழிமறித்து செல்போனை பறித்து உள்ளனர். மேலும் கூலமேடு பகுதியை சேர்ந்த யஸ்வந்த் என்பவரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது ஆணையம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது (20), ஹரிஷ் (19) மற்றும் ஆத்தூரை சேர்ந்த பெயிண்டர் விஜயன் (24) ஆகியோர் என்பதும், இவர்களில் மூர்த்தி சேலத்தில் ஒரு கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டும், ஹரிஷ் தலைவாசல் அருகே உள்ள கல்லூரியில் மெக்கானிக் படிப்பும் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, ஹரிஷ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய விஜயனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story