சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சங்ககிரி:
சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவ பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியுடன் சங்ககிரி நகருக்கு அழைத்து வரப்பட்டார். பிறகு சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு இரவு 10 மணியளவில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story