மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது


மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது
x
தினத்தந்தி 7 May 2022 4:12 PM IST (Updated: 8 May 2022 4:37 PM IST)
t-max-icont-min-icon

மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது

உடுமலை தளி சாலையில் உள்ள டி.வி.பட்டிணம் பஸ் நிறுத்தம் அருகே மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் கடை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது

உடுமலை நகராட்சி டி.வி.பட்டிணம்  தளி பிரதான சாலையில், முன்பு டாஸ்மாக் கடை இருந்து வந்தது. அதன் அருகே கோவில்கள், பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளன. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து திருமூர்த்தி மலை, அமராவதி அணை, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் பஸ்களில் செல்வார்கள். அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்களில் புறப்பட்டு செல்வார்கள். இந்த பகுதியில் வணிக நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இந்த சாலையில்  வாகனபோக்குவரத்தும் அதிகம் உள்ளது. அதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இ.எஸ்.ஐ.மருத்துவ மனை உள்ளது. அதனால் பஸ் நிறுத்தம் அருகேடாஸ்மாக் கடைஇருந்ததால் பல்வேறு தரப்பு பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது.அதனால் அந்த டாஸ்மாக் கடை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
 
திறக்கக்கூடாது

ஆனால் தற்போது அந்த இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்களுக்கு மீண்டும் இடையூறு ஏற்படும். அதனால் அந்த இடத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை திறப்பதற்கு அனுமதியளிக்காமல், டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு   அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story