பிரேக் பிடிக்காமல் வேன் மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது


பிரேக் பிடிக்காமல் வேன் மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 7 May 2022 4:28 PM IST (Updated: 7 May 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சூரப்பட்டு சர்வீஸ் சாலையில் பிரேக் பிடிக்காமல் வேன் மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது.

திரு.வி.க. நகர், 

ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை திருமங்கலத்தில் வாடிக்கையாளரை இறக்கிவிட்டு அம்பத்தூரில் அடுத்த வாடிக்கையாளரை அழைத்துச்செல்ல சென்றார்.

சூரப்பட்டு சர்வீஸ் சாலையில் காரை திருப்பும்போது பிரேக் பிடிக்காததால் அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த வேன் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. மோதிய வேகத்தில் கார் தீ்ப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், உடனடியாக காரில் இருந்து வெளியேறி காயம் இன்றி உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story