கோவில்பட்டியில் மாவட்ட ஆக்கி போட்டி


கோவில்பட்டியில் மாவட்ட ஆக்கி போட்டி
x
தினத்தந்தி 7 May 2022 7:27 PM IST (Updated: 7 May 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாவட்ட ஆக்கி போட்டி தொடங்கியது.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மாவட்ட ஆக்கி போட்டி தொடங்கியது.

ஆக்கி போட்டி
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில், தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக் தலைமை வகித்தார்.
போட்டியை மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் ரத்தினராஜ் தொடங்கி வைத்தார். வீரர்களை கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி ஆக்கி பயிற்சியாளர் முத்துக்குமரன், மாவட்ட ஆக்கி கழகச் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

பாண்டவர்மங்கலம் அணி வெற்றி
முதல் போட்டியில் பாண்டவர் மங்கலம் ஞானமுத்து ஆக்கி அணியும், கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணியும் மோதியது. இதில் பாண்டவர்மங்கலம் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணியும், கோவில்பட்டி பாரதி ஆக்கி அணியும் மோதியது. இதில் கூசாலிபட்டி அணி 5- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3-வது போட்டியில் திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியும், கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஆக்கி அணியும் மோதியது. 
இதில் திட்டங்குளம் அணி 5- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் இலுப்பையூரணி அணியும், பாண்டவர் மங்கலம் ஆக்கி அணியும் மோதியது. இதில் இலுப்பையூரணி அணி 4- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Next Story